நோயில்லா வாழ்விற்கு பூண்டு - எப்படி எல்லாம் சாப்பிடலாம்?

பச்சையாக பூண்டு

சளித்தொல்லையால் அவதி படுவோர்கள், பூண்டினை பச்சையாக உட்கொண்டு வரலாம்.

தேன் கலந்த பூண்டு

சளித்தொல்லையில் இருந்து விடுபட மற்றொரு வழியும் இருகின்றது. அது பூண்டுடன் தேன் கலந்து சாப்பிடுவதுதான். இரண்டு பூண்டு பற்களை எடுத்துக் கொண்டு, அவற்றை பொடிப் பொடியாக வெட்டி, அதனை தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை என உட்கொண்டு வர சளித்தொல்லையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

பூண்டு சுவை நீர்

இரண்டு பூண்டு பற்களை எடுத்துக் கொண்டு, அவற்றை பொடிப் பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். பின்பு ஆறவைத்து இளம்சூடாக குடித்து வர வேண்டும்.

பூண்டுடன் பழச்சாறு

ஆரஞ்சு பழச்சாற்றில் பூண்டினை சேர்த்து இரவு நேரங்களில் அருந்தி வர உடலின் வெப்ப நிலையானது அதிகரித்து, சளிதொல்லையில் இருந்து உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பூண்டுடன் டீ

சளிதொல்லையால் அவதி படுவோர் பூண்டுடன் சேர்த்து டீ குடித்து வர சளிதொல்லையிலிருந்து விடுபட முடியும். இவற்றுடன் எலுமிச்சை மற்றும் தேன் கலந்தும் அருந்தலாம்.

பூண்டுடன் தக்காளி

இரண்டு தக்காளி பழம் மற்றும் சிறிது பூண்டு இரண்டையும் அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து அருந்தி வர சளிதொல்லையிலிருந்து விடுபட முடியும்.

பூண்டு சூப்

சளிதொல்லையிலிருந்து விடுபட தினமும் இரு முறை பூண்டு சூப் பருகி வர நல்ல பலன் கிட்டும்.

பூண்டு கஞ்சி

மூக்கை துளைக்கும் வாசனையுடன், கமகமக்கும் பூண்டு கஞ்சி வயிற்றுப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.

பூண்டு பால்

பாலுடன் பூண்டு, மிளகு தூள், மஞ்சள் தூள், மற்றும் பனகற்கண்டு சேர்த்து தொடர்ந்து உட்கொண்டு வர மூட்டு வலி, இடுப்பு வலி, வாய்வு பிடிப்பு போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட முடியும்.

 

Leave a comment