இந்துப்பு ஒரு பார்வை

இந்துப்பு அல்லது இமயமலை உப்பு (Himalayan salt) என்பது ஒரு வகை பாறை உப்பு ஆகும். இவ்வகை உப்பு இந்தியா மற்றும் பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் பகுதிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்வுப்பை தமிழில் இந்துப்பு என்பர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உப்பு மலைத்தொடரில் இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இமயமலைலிருந்து 310 கி மீ தொலவிலும், லாகூரிலிருந்து 260 கி மீ தொலைவிலும், அமிர்தசரசிலிருந்து 298 கி மீ தொலைவிலும் உள்ள உப்பு மலைத் தொடரில் இந்துப்பு வெட்டி எடுக்கப்படுகிறது.  இந்தியாவில் இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் இந்துப்பு, சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது

உப்பிட்டவரை உள்ளளவும் நினை', 'உப்பில்லா பண்டம் குப்பையிலே'  போன்ற முதுமொழிகள் உப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துபவை. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, உணவில் உப்பைச் சேர்க்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துவர். அதிகமாக உப்பைச் சேர்ப்பதும், தவறான உப்பைச் சாப்பிடுவதும் உடல்நலத்துக்குக் கேடுதான். இதுவரை நமக்குத் தெரிந்தவை, பயன்படுத்திவந்தவை கல்லுப்பும் டேபிள்சால்டும்தான். ஆனால், இவற்றை எல்லாம்விட சத்துக்கள் நிறைந்த, நோய்கள் நெருங்காத, ரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய உப்பு, இந்துப்பு.

 

இந்துப்பில் உள்ள கனிமங்கள்

இமயமலை உப்பு எனப்படும் இந்துப்பில், சாதாரண உப்பில் உள்ள சோடியம் குளோரைடுடன் (95-98%) பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், சல்பர், புளோரைடு, அயோடின் கனிமங்களும் மற்றும் சில கனிமங்களும் (2-4%) கொண்டுள்ளது (2-4%). 

நிறம்

படிக வடிவத்தில் உள்ள இந்துப்பு குறைவான வெண்மை, பிங்க், செம்பழுப்பு, செந்நிறத்திலும் கிடைக்கிறது

மருத்துவப் பயன்பாடு

சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துப்பை வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதாரண சமையல் உப்பில் கிடைக்கக்கூடிய சுவை இதிலும் கிடைக்கும். சாதாரண உப்பில் உள்ள சோடியத்தைவிட இதில் உள்ள சோடியத்தின் அளவு சிறிது குறைவுதான். உயர் இரத்த அழுத்தம், சக்கரை நோய் உள்ளவர்கள் சாதாரண உப்புக்கு பதிலாக இந்துப்பு எடுத்து வர நோய் கட்டுக்குள் இருக்கும்.

 

எங்களது இணையதளத்தில் இந்துப்பு ஆர்டர் செய்ய செல்லவும் https://goo.gl/iSFmsU.

 

 Source : WikiPedia & Vikadan

Leave a comment