பொதுவாகவே நம் சமையலறை அலமாரியில் சமையலுக்கு தேவையான பொருட்கள் வைத்திருப்போம். அவ்வாறு வைக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு வித சிறப்பு மருத்துவ குணம் இருக்கத்தான் செய்கின்றது. சமையலுக்கு தேவையான பொருட்கள் தானே என்று, அவற்றின் மருத்துவக் குணங்களை பற்றி அறியாமலேயே இருந்து விடுகிறோம். சமையலுக்கு எப்பொதுமே பூண்டிற்கு முன்னுரிமை உண்டு. இந்த பூண்டின் மருத்துவ குணங்கள் அறிந்த நம் முன்னோர்கள், இதனுடன் பல பொருட்களை சேர்த்து மருந்தாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பூண்டு, வெங்காயம் போன்ற ஒரு தாவரத்தின் கிழங்காகும், இது தாவரத்தின் வேர் பகுதியில் இருந்து அறுவடை செய்யபடுகிறது. பூண்டின் கமகம வாசனை தான் சமையலறையையே புத்துயிர்ப்பாகவும், ஒரு வித வாசனை கூடமாக மாற்றிவிடுகிறது.
சருமப்பிரச்சனைக்கு தீர்வு
சிலருக்கு பூஞ்சைகளால் படர்தாமரை, பாதப்படை வரக்கூடும். அப்படி அவதிப்படும் மக்களுக்கு பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் தகுந்த தீர்வாக அமையும்.
இரத்தக்கொதிப்பு தணிய
நம் உடலில், ஏஞ்சியோடென்சின் மிமி என்கிற புரதமானது, நம்முடைய இரத்தக் குழாய்களை மிகவும் சிறிய அளவில் சுருங்க வைக்கும் தன்மை கொண்டது. இதன் காரணமாக, இரத்த கொதிப்பு அதிகரிக்கும் அபாய நிலை உள்ளது. பூண்டில் உள்ள அல்லசின் ரசாயனம் ஏஞ்சியோடென்சின் மிமிவின் தன்மைக்கு எதிர்வினையாற்றி விடுகிறது. ஆகவே பூண்டினை உண்டு வருவோருக்கு, இரத்த கொதிப்பு குறைந்து நர்மலாகி விடுகிறது.
இதயத்தை பாதுகாக்க
பூண்டினை இதயத்தின் பாதுகாவலன் என்று கூட சொல்லலாம். பூண்டு இதயப்பிரட்சனைகளில் இருந்து தீர்வு அளிக்கின்றது. பொதுவாக, நம் உடலில் வயது அதிகமாகும் போது, உடலில் உள்ள தமனிகள் விரிவடைகின்ற திறனை, கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பூண்டு உதவுகிறது.
கொலஸ்ட்ரால் குறைய
கொழுப்பு அதிகரிப்பது நம் உடலுக்கு பாதிப்பு. நம் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு பூண்டு தக்க அருமருந்தாக பயன்படுகிறது.
அலர்ஜிக்கு எதிராக
பொதுவாக நம் உடலில் தேவையற்ற ரசாயனங்கள் சேர்வதால், அலர்ஜி ஏற்படுகிறது. நாம் அன்றாட பயன்படுத்தும் பூண்டில், அலர்ஜியை எதிர்க்கும் குணங்கள் அதிகஅளவில் அடங்கியுள்ளது.இதன் காரணமாக, நம் உடலில் ஏற்படும் அலர்ஜியில் இருந்து பூண்டு எதிர்த்து போராடி, நம்மை பாதுகாக்கிறது.
சுவாச பிரச்சனைகள் தீர
சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் அன்றாடமும் பூண்டினை உண்டு வரலாம். உணவிலும் பட்சையாகவும் பூண்டினை பயன்படுத்தி வந்தால், சுவாச பிரச்சனைகளில் இருந்து தகுந்த தீர்வு அளிக்கும். பூண்டில் பாக்டிரியாக்களை எதிர்க்கும் குணநலன்கள் அடங்கி இருக்கின்றன. இதனால் பூண்டை நீங்கள் தினமும் பயன்படுத்தும் போது தொண்டை எரிச்சல் மற்றும் சளித்தொல்லை அடங்கி விடும்.
சர்க்கரை நோய்க்கு
சர்க்கரை நோய்க்கு தகுந்த தீர்வாகவும், வரும் முன்னரே காக்கும் அருமருந்தாகவும் பூண்டு இருக்கின்றது. பூண்டினை பயன்படுத்தும் போது, உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரித்து விடுகின்றது. உடலில் இன்சுலின் சுரப்பு சீராக இருந்து விட்டாலே பிரச்சனை இல்லை. இதன் காரணமாக, ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை அளவும் சீராகி விடுகின்றது.
மரு, கலாணி பிரச்சனைகள்
மரு, கலாணி பிரச்சனைகளால் அவதிபடுபவர்கள், பூண்டிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றினை காலணிகள் மற்றும் மருக்கள் மீது தடவினால், மருக்கள் மற்றும் காலணிகள் காணமால் போகும்.
புற்றுநோயிலிருந்து தப்பிக்க
பூண்டில் இருக்கும் அல்லில் சல்பைடு எனப்படும் ரசாயனப்பொருள், பற்றுநோய் எதிர்பியாக பயன்பட்டு வருகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பகப்புற்றுநோய் பிரட்சனைகளிலிருந்து விடுபட பூண்டு முக்கிய பங்காற்றுகிறது.
பல் வலி விலக
பல்வலி இருந்தால் நசுக்கிய பூண்டு, கிராம்பு ஆகியவற்றை பாதிக்கபட்ட பற்களில் போட்டு விடுங்கள். இவற்றில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை இருப்பதால் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
உடல் எடை குறைய
பூண்டு உடலில் உள்ள கொழுப்பு அணுக்கள் உருவாகாமல் தடுக்கிறது. இதனால் உடலைக் குறைக்க விரும்புவோர், பூண்டினை உட்கொள்ள மறவாதீர்கள்.
Source: உணவு நலம்