ஆஸ்துமா, இருமல், சளிக்கு கண்டங்கத்தரி லேகியம்

கண்டங்கத்தரி ஆனது முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய பயனற்ற நிலங்களில் வளரும் ஒரு மூலிகைச் செடி ஆகும். இதற்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்களும் உண்டு. இதற்கு பல கிளைகள் உண்டு. அக்கிளைகளிலும் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு. முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்; இது கத்தரி வகைச் செடி ஆகும். காயானது கத்தரிக்காய் போன்று 1.3 முதல் 3 செ.மீ விட்டம் உடையதாகவும், உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை விதைகள் நிறைந்தும் காணப்படும்.

பெயர்க் காரணம்

'கண்ட' எனும் சொல் முள்ளைக் குறிக்கும் (கண்ட = முள்) கண்டங்கத்தரி (முட்கத்தரி). 'கண்டம்' என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கும். தொண்டையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதால் இதற்கு கண்டங்கத்தரி என்று பெயர்.

இயற்கை மருத்துவம்

இளம் பிள்ளை வாத நோய் தாக்கிய சிறுவர்களுக்கு, கண்டங்கத்தரி தளைகளை நீருடன் மட்பாண்டத்தில் வேக வைத்து நீரை குளியல் செய்து வர குணமாகும்.

ஆஸ்துமா, இருமல், சளி போன்ற நோய்களுக்கு கண்டங்கத்தரி, துளசி மற்றும் தூதுவளைத் தளைகளை இருமடங்கு நீருடன் அரை பங்காகும் அளவு சுண்டக் காய்ச்சி உட்கொண்டு வந்தால் குணமாகும்.

நெஞ்சு சளி வெளியேற கண்டங்கத்திரி காயை சமைத்து உண்டுவர நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளியேற்றும், பசியை தூண்டும். கழிச்சலை உண்டாக்கும்.

நாள்பட்ட இருமலுக்கு சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்தி பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். இதன் வேரையும் குடிநீரிட்டு அதில் திப்பிலிப் பொடியை சேர்த்து கொடுத்தால் இருமல் நீங்கும்

பல் வலிக்கும், பல்லில் இருக்கும் கிருமிகளை போக்கவும் கண்டங்கத்திரி பழத்தின் விதைகள் பயன்படும். நெருப்பில் இவற்றை போட புகை எழும். இந்த புகையை பற்களின் மேல்படும்படி செய்ய வலி தீரும். இதன் பழத்தையும் உலர்த்தி  பொடித்து நெருப்பில் போட புகை வரும். இதனாலும் பல்வலி, பல்லிலுள்ள கிருமிகள் நீங்கும்.

ஆஸ்துமாவை முழுமையாகக் குணப் படுத்தும் அற்புதத்திறன் கண்டங்கத்தரிக்குஉண்டு. கண்டங்கத்தரி லேகியம் எடுத்துகொள்ள பலன் கிடைக்கும்.

 

எங்கள் இணையத்தளத்தில் கண்டங்கத்தரி லேகியம்  ஆர்டர் செய்ய செல்லவும் https://goo.gl/woj6ms

 

Leave a comment