ஆடாதோடை ஒரு பார்வை

ஆரோக்கியமான வாழ்விற்கு சித்தர்கள் பல காயகற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர் என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப்பட்ட மூலிகைகளில் ஒன்றான ஆடாதொடா தாவரம் சிறந்த காயகற்ப மூலிகையாகும். ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என மருவி பெயர் பெற்றுள்ளது. நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கவல்ல இத்தாவரம் சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் காணப்படும். 

வேதிப்பொருட்கள் 

  • வாசிசின்
  • வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின்
  • வைட்டமின் சி
  • கேலக்டோஸ்

இந்த வாசிசின் என்னும் அல்கலாய்டு நுரையீரல் செல்களில் வேலை செய்து அதை விரிவடைய செய்வதால் இது ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை தீர்ப்பதில் இந்த மூலிகை முக்கிய பங்கு வகிக்கின்றது.

மருத்துவ பயன்பாடுகள்

இம்மூலிகை இருமல், வாந்தி, விக்கல், சன்னி, சுரம், வயிறு தொடர்பான நோய்கள் போன்றவற்றை நீக்கும்.

"ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி.”
- (அகத்தியர் குணவாகடம்)

பயன்படுத்தும் முறைகள்

  • சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
  • இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
  • இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல்,இளைப்பு,சுரம் தீரும்.
  • இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
  • இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக்கொடுக்க இருமல் தீரும்.
  • இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
  • ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்.

 

எங்கள் இணையத்தளத்தில் ஆடாதோடை பொடி மற்றும் மணப்பாகு ஆர்டர் செய்ய செல்லவும்

Leave a comment