அற்புத அருகன் தைலம்

அறுகு

அறுகம்புல் [Scutch Grass] என்பது 'Cynodon dactylon புல் வகையை சேர்ந்த ஒரு மருத்துவ மூலிகையாகும். சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் அருகம் புல் முதலிடத்தை வகிக்கிறது. வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்தாக இது காணப்படுகிறது. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க,

உடல் அரிப்பைப் போக்க, நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது.அருகம்புல்லில் அடங்கியுள்ள மருந்தும் பொருள்களும் ஒரு நீண்ட பட்டிலை உடையது. அருகம்புல்லில் பின்வரும் மருத்துவ வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன. அவையாவன

1.மாவுச்சத்து (புரோட்டீன்).

2.உப்புச்சத்து (சோடியம்)

3.நீர்த்த கரிச்சத்து

4.அசிட்டிக் அமிலம்

5.கொழுப்புச் சத்து

6.ஆல்கலாய்ட்ஸ்

7.அருண்டோயின்

8.பி.சிட்டோஸ்டர்

9.கார்போஹைட்ரேட்

10.கவுமாரிக் அமிலச் சத்து

11.ஃபெரூலிக் அமிலச் சத்து

12.நார்ச் சத்து (ஃபைபர்)

13.ஃப்ளேவோன்ஸ்

14.லிக்னின்

15.மெக்னீசியம்

16.பொட்டாசியம்

17.பால்மிட்டிக் அமிலம்

18.செலினியம்

19.டைட்டர் பினாய்ட்ஸ்

20.வேனிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி சத்து ஆகியன பொதிந்துள்ளன.

அருகன் தைலம்

அருகன் தைலத்தை வெளிப்பூச்சாக தடவி வர அனைத்துத் தோல் நோய்கள், தலைமுடி உதிர்தல், புழுவெட்டு ஆகியன தீரும்.

அறுகம்புல் நச்சு நீக்கி அலர்ஜியை நீக்கக்கூடியது. இது `கரப்பான்’ எனப்படும் எக்ஸிமா நோய்க்கான சித்த மருத்துவத்தின் முதல் தேர்வு. செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் இந்தப் புல்லின் சாற்றையும் சில மூலிகைகளையும் சேர்த்துக் காய்ச்சி எடுக்கப்படும் `அருகன் தைலம்’ இந்திய மருத்துவ மருந்துகளில் மிகப் பிரபலமானது. அடாபிக் டெர்மடிட்டிஸ் (Atopic Dermatittis) எனும் அலர்ஜியால் சருமத்தின் நிறம் கறுத்து, அதீத அரிப்பைத் தரும் தோல் நோய்க்கு அருகன் தைலம் இதம் அளிக்கும் இனிய மருந்து.

தேமல் குணமாகும் தோலில் பூஞ்சைத் தொற்றின் காரணமாக ஏற்படும் அரிப்பற்ற நிறமாற்றத்தை தேமல் என்கிறோம். தேமல் வெளுத்தோ, இளஞ்சிவப்பு நிறத்துடனோ, கருமை நிறத்துடனோ காணப்படலாம். ஒருவரது உடம்பிலும் பிறருக்கும் பரவக் கூடியது.அருகன் தைலம் பூசி வர தேமல் குணமாகும்.

தோலில் ஏற்படும் வறட்சியைத் தடுக்க வெளிப் பிரயோகமாக அருகன் தைலம் பயன்படுத்தத் தோல் வறட்சியின் தீவிரம் குறையும்.

தோலில் உண்டாகும் வியர்குரு, சொறி, சிரங்கு, கரப்பான், பூஞ்சை, பாக்டீரியா தொற்றுகள் மற்றும் தோல் திடீரென்று தடித்தல் போன்றவைகளுக்கு மருந்தாகிறது.

தோல் நோய்கள், தீக்காயங்கள், சேற்றுப் புண் மற்றும் தலையில் தோன்றும் பொடுகிற்கு சிறந்த மருந்தாகிறது. 

அருகன்  தைலம் செய்முறை:

தேங்காய் எண்ணெய் – 200 மி.லி.

அருகம்புல் சாறு – 100 மி.லி.    

பசும் பால் – 50 மி.லி.

பரங்கிசக்கை – 10 கிராம்

அதிமதுரம் – 10 கிராம்

செய்முறை: அருகம்புல்லை அரைத்து சிறிது நீர் கலந்து வடிகட்டி சாறு எடுத்து கொள்ளவும். பசும்பாலில் பரங்கிசக்கை மற்றும் அதிமதுரத்தை அரைத்து கொள்ளவும். அருகம்புல்சாறு மற்றும் அரைத்த விழுதை தேங்காய் எண்ணெயில் கலந்து சிறு தீயில் வைத்து காய்ச்சவும். நீர் சுண்டிய பின் வடிகட்டி பயன்படுத்த
வும்.

 

எங்கள் இணையத்தளத்தில் அருகன்  தைலம் பார்வையிட மற்றும் ஆர்டர் செய்ய செல்லவும்.

7 comments

Rani Paul

Rani Paul

Very effective medicine for itching .We can apply allover the body for skin itching.

Pandiselvam

Pandiselvam

நானும் வாங்கிஉள்ளேன் தோல் அரிப்பிற்கு பயன் படுத்தி பார்க்கபோகிறேன்

ஷேக் மைதீன்

ஷேக் மைதீன்

இன்னைக்கு தான் வாங்கினேன் இன்னும் யூஸ் பண்ணவில்லை உடல் அரிப்புக்காக யாரும் சொல்ல நானாக போய் கேட்டேன்

ஷேக் மைதீன்

ஷேக் மைதீன்

இன்னைக்கு தான் வாங்கினேன் இன்னும் யூஸ் பண்ணவில்லை உடல் அரிப்புக்காக யாரும் சொல்ல நானாக போய் கேட்டேன்

Varadarajan

Varadarajan

Useful information please

Varadarajan

Varadarajan

Useful information please

Varadarajan

Varadarajan

Useful information please

Leave a comment