குழந்தை பேறின்மை என்பது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம், காலச்சூழ்நிலையும்தான். ஆணோ, பெண்ணோ மலடாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுவதைப்போல உணர்கின்றனர். சந்ததியை உருவாக்க என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மூலிகைகளின் மூலம் மலடு நீக்கும் மருத்துவத்தை கண்டறிந்துள்ளனர் சித்தர்கள். அதிமதுரம் எனப்படும் அரிய மூலிகை எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது ஆண், பெண்களின் குழந்தை பேறின்மையை போக்கும் என்றும் சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மருத்துவ குணங்களைத் தெரிந்து கொள்வோம். அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.
மலடு நீங்கும்
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும். அதிமதுரத்தினால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும். அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை இரண்டு முதல் மூன்று மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பிரசவத்திற்கு முந்தைய உதிரப்போக்கு
அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை குணமடையச்செய்யலாம்.
தாய்ப்பால் பெருகும்
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.
மலச்சிக்கல் நீங்கும்
சிறுநீரக கல்லினை நீக்கும் மருந்தாக அதிமதுரம் திகழ்கிறது. இது சிறுநீர் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும் உதவும். அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
தொண்டைக் கட்டு இருமல் சளி
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும். அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு இரண்டு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும். அதிமதுரம் லேகியம் சாப்பிட்டால் வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
ஆஸ்துமா குணமடையும்
அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
வழுக்கை நீங்கி முடி வளரும்
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும். அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.
Source : https://tamil.boldsky.com
2 comments
James mosher
I stumbled across a comment while scouring the internet. I am suffering from erectile dysfunction, which was the same situation i found on the post , i ordered mine and same with me today am cured ,if you also need his assistance , You meant go through his website: https://bubaherbalmiraclem.wixsite.com/website Or reach via mail: buba.herbalmiraclemedicine@gmail.com or his Facebook Page ;https://www.facebook.com/profile.php?id=61559577240930 . AND THANK ME LATER
Stephanie Sally
Hello everyone, I am from Wembley, Britain. I want to write this testimony to tell others and thank Dr. Odunga for what he has done for me. The first 12 years of my marriage I had 5 miscarriages and I was called all sorts of names by my mother-in-law and this made my marriage life very hectic and a burden of sorrow. I contacted Dr. Odunga for help and I will say that he is a very strong and honest man and he indeed helped me solve my problem. I saw his email in a testimony and I contacted him, little did I know it would be the end of all my problems. After 2 days of contact, I received a fertility herb and he told me to use it. The herb worked and my husband even loved me more and bought me expensive things. One afternoon, I went to a nearby hospital and came back home with the positive result of my pregnancy and after 9 months I gave birth to a baby boy. Ever since I contacted Dr. Odunga, my story has been different. I have 3 children at present and I am very happy in my marriage. Please, contact him at odungaspelltemple@gmail.com OR Whats App him +2348167159012 to help you too