மருத்துவப் பயன்களை அள்ளித்தரும் கோரோசனை மாத்திரை

கோரோசனை சித்த மருத்துவத்திலும், மாந்திரீகத்திலும் அதிகளவு பயன்படுத்தப் படுகிறது.

கோரோசனை குணமாக்கும் நோய்கள்

கோரோசனைக்கும், மேகநீர், மேக வெட்டை, பித்த கோபம், உன்மத்தம், கணை மாந்தம், கபாதிக்கம், மசூரிகைப் புண் இவைகள் நீங்கும்.

கோரோசனை மருத்துவ பயன்

சித்த மருத்துவத்தில் நோய்களை குணமாக்கும் முக்கிய மருந்தாக சேர்க்கபடுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  சுரம், மாந்தம், கணை நோய் முதலியவற்றை குணமாக்கும் தன்மை கோரோசனை உண்டு.

மூலப்பொருட்கள் 

கோரோசனை 
குங்குமப் பூ 
கற்பூரம்
பச்சைக் கற்பூரம் 
ஏலம் 
கிராம்பு 
கோஷ்டம் 
அக்ரகாரம் 
கடுக்காய்த் தூள்

இருமல்

வெற்றிலைச் சாற்றுடன் அல்லது கோரோசனை சேர்த்து, தேன் கலந்து கொடுத்தால்  இருமல் குணமாகும்.

ஆஸ்த்துமா குணமாக 

கோரோசனை, இலவங்கம், குங்கும்ப்பூ, வகைக்கு 10 கிராம், வெள்ளெருக்கன் பூ 100 கிராம், மிளகு 50 கிராம், சேர்த்து  அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து உலர்த்தி வைக்கவும். காலை,மாலை ஒரு மாத்திரை தேனில் சாப்பிட்டு வந்தால் ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களில் ஆஸ்த்துமா, இழப்பு, இரைப்பு,  காசம், குணமடையும்.

குழந்தைகளின் கபம், மாந்தம்

பொதுவாக தாய்ப்பாலில் கொடுக்கவும். இருமல், இளைப்பு, கபம், சுரம், நெஞ்சுத்துடித்தல், மூச்சுமுட்டல், இவைகளுக்கு கண்டங்கத்திரி, கற்பூரவள்ளி, தூதுவளை, வெற்றிலை இவைகளின் எதாவது ஒரு சாற்றில் அல்லது சித்திரத்தை கஷாயத்தில் தாய்ப்பால் கலந்து கோரோசனை மாத்திரையை உரைத்து கொடுக்கவும்.

அளவு 

1 மாதம் முதல் 6 மாதம் வரை  -  1/2 மாத்திரை 

6 மாதம் முதல் 1 வருடம் வரை  -  1 மாத்திரை 

1 வருடம் முதல் 3 வருடம் வரை  -  2 மாத்திரை 

3 வருடம் முதல் 5 வருடம் வரை -  3 மாத்திரை 

அதற்கு மேல் 4 மாத்திரை 

 

குறிப்பு 

காலையில் மட்டும் 3 அல்லது 5 நாட்கள் மட்டும் கொடுக்கவும். மாலையில் தவிர்க்கவும்.

 

Buy Here 

 

Leave a comment