ஆஸ்த்துமா, இருமல், சுரம்,சளி, தொண்டைக் கட்டு போன்ற நோய் தீர்க்கும் ஆடாதோடை

ஆடாதோடை அல்லது ஆடாதொடைவாசை என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச் செடியாகும். இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை மருத்துவ மூலிகைகளாகப் பயன்படுகிறது.

மருத்துவ பயன்பாடுகள்

  • கோழையகற்றி
  • நுண்புழுக்கொல்லி
  • சிறுநீர் பெருக்கி
  • வலிநீக்கி

இம்மூலிகை இருமல், வாந்தி, விக்கல், சன்னி, சுரம், வயிறு தொடர்பான நோய்கள் போன்றவற்றை நீக்கும்.

"ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடினமிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்அகத்துநோய் போக்கு மறி.”

- (அகத்தியர் குணவாகடம்)

 

பயன்படுத்தும் முறைகள்

  • சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகும்.
  • இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.
  • இவைகளுடன் திப்பிலி,ஏலம்,அதிமதுரம்,தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல்,இளைப்பு,சுரம் தீரும்.
  • இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.
  • இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும்.
  • இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.
  • ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்

ஆடாதோடை மணப்பாகு 

பக்க விளைவுகள் எதுவும் இல்லை ..! "

சித்தர்கள் அருளிய ஆடாதோடை மணப்பாகு என்ற அறிய மருந்தின் மருத்துவக் குணங்களில் சில..

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சளி இருமல் காய்ச்சல் வருபவர்களுக்கு 5 முதல் 10 கிராம் வரை வெந்நீரில் இருவேளை உணவுக்குப் பின் கொடுக்கவும்.

"ஆடாதோடைக்குப் பாடாத தொண்டையும் பாடும் என்கிற பழமொழி உண்டு. ஆடாதோடை இலைகளில் ஒரு முக்கியமான எண்ணெயும், வாசிசீன் என்கிற ஆல்கலாய்டும் உள்ளன."

ஆடாதோடை சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும் வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயற்படும்.

மணப்பாகு செய்முறை
ஆடாதோடை இலை -100கி(காம்பு நீக்கப்பட்டது)
கருப்பட்டி-100கிராம்

நடுநரம்பு, காம்பு நீக்கப்பட்ட, நன்கு அலசிய, 100கிராம் ஆடாதோடை இலைகளைக் குறுக அரிந்து, 800மிலி நீர்விட்டு, அடுப்பேற்றி,சிறு தீயாக எரித்துக் கசாயமாகக் காய்ச்சவும்.100மிலியாகக் கசாயம் வற்றியவுடன், வடிகட்டி, 100கிராம் கருப்பட்டியைக் கலந்து, மீண்டும் அடுப்பேற்றி சிறு தீயாக எரிக்கவும். பாகுபதம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி எடுத்துக் கொண்டால், ஆடாதோடை மணப்பாகு தயார்!

பயன்படுத்தும் அளவு
குழந்தைகளுக்கு-5 மிலி-இருவேளை
பெரியவர்களுக்கு-10-15மிலி-இருவேளை(அ)மூன்றுவேளை

துணை மருந்து:வெந்நீர்

Leave a comment