பொன்னாங்கண்ணி கீரை உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும், எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. எங்கும் வளரும் தன்மை கொண்டது. இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. பொன்னாங்கண்ணி கீரையில் இரண்டு வகை உண்டு, அவை, சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி ஆகும் இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. நாட்டு பொன்னாங்கண்ணியை தான் பெரும்பாலும் மருத்துவத்திற்கும், சமையலுக்கும் பயன்படுத்துவார்கள். நாட்டு பொன்னாங்கண்ணி பல அறிய மருத்துவ குணங்களை கொண்டது.
சத்துக்கள்
பொன்னாங்கண்ணியில் சீமைப்பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரு வகை உண்டு. இந்த கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை உள்ளன. பொன்னாங்கண்ணிக்கீரை குளிர்ச்சியை தர வல்லது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் பல ஸ்டிரால்கள், அமிலங்கள் உள்ளன. சிட்ரோஸ்டிரால், சிட்கமோஸ்டிரால், கெஃம்பெஸ்டிரால், ஒலியனோலிக் அமிலம், லுபியால் போன்றவை பொன்னாங்கண்ணியில் காணப்படுகின்றன.
பயன்கள்
- பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வர, கண் பார்வை நன்றாக தெரியும்.
- இந்த கீரை கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி, கண்ணில் நீர்வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்களை குணமாக்கும் தன்மைகொண்டது.
- பொன்னாங்கன்னியில் இருந்து தைலம் எடுத்து தடவி வந்தால் கண் எரிச்சல், கண்வலி குணமடையும். கண் குளிர்ச்சியடையும்.
- உடலில் மிகுதிப்படும் உஷ்ணத்தை தணித்து உடலை சமநிலையில் வைத்திருக்கும். உடலுக்கு வலுவையும் நல்ல வளர்ச்சியையும் அளிக்க வல்லது. உஷ்ணமிகுதியால் மூலநோய் ஏற்பட்டு வருந்துபவர்கள் நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்
பொன்னாங்கண்ணி கீரைத் தைலம்
நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட பொன்னாங்கண்ணி கீரை தைலத்தை வாரம் ஒருமுறை தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் சென்று இளம் சூடான நீரில் குளித்து வர உடலில் மிகுதி படும் உஷ்ணம் குறைந்து கண் எரிச்சல் மறையும்.
எங்கள் இணையதளத்தில் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் ஆர்டர் செய்து உடல் உஷ்ணத்தை குறைத்திடுங்கள்