தீரா நோய்களைத் தீர்க்கும் முருங்கை வேர், பட்டை

முருங்கைக்கீரை, காய், பிசின் வரிசையில் மிகுந்த மருத்துவக் குணம் நிரம்பியது முருங்கை வேர். அதன் பட்டைக்கும் பல  நோய்களைக் குணமாக்கும் தன்மை உண்டு.

* முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் குணம் கிடைக்கும்.

* முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் குப்பைமேனி இலைச் சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்ச வேண்டும். இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் குணம் கிடைக்கும்.

* சந்தனம், தேற்றான்கொட்டை, பூமிச் சர்க்கரைக் கிழங்கு, பூனைக்காலி விதை மற்றும் முருங்கை வேர்ப்பட்டை சமஅளவு எடுத்துத் தேங்காய்ப்பால் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்த கலவையோடு சர்க்கரை சேர்த்து 12 நாள்கள் குடித்து வந்தால் உடல்சூடு தணியும்; தேகம் பொலிவு பெறும்.

* முருங்கைப் பட்டையின் மேல்தோலை மட்டும் நீக்கிவிட்டு நீர் விட்டுக் கொதிக்க வைக்கவேண்டும். அந்த நீரை வடிகட்டி அதில் ரசம் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குளிர் காய்ச்சல், பாரிசவாயு, வலிப்பு போன்றவை குணமாகும்.

* இளம் முருங்கை வேரை நிழலில் உலர்த்திப் பொடித்து தினமும் காலை, மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

* முருங்கை வேரின் சாறுடன் சம அளவு பால் சேர்த்து அருந்தினால் விக்கல், இரைப்பு, உள் உறுப்புகளில் வீக்கம், முதுகுவலி  போன்றவை நீங்கும்.

* முருங்கைப் பட்டை, மூக்கிரட்டை வேர், ஊமத்தை இலை, பூண்டு சம அளவு எடுத்து அரைத்து மூட்டு வீக்கத்தின்மீது பற்று போட்டால் வீக்கம் கரையும்; வலி குறையும். மூட்டு தொடர்பான வாய்வு நோயும் குணமாகும்.

முருங்கை பொடி மற்றும்  முருங்கைப்பட்டை பொடி வாங்க இங்கே கிளிக் செய்யவும் https://bit.ly/2CXY2uj

Source  : Vikadan.com

Leave a comment