ஆவாரை - சர்க்கரை நோயிலிருந்து பாதுகாப்பு என்றென்றும்

ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்பது பழமொழி. ஆம் அத்தகு ஆற்றல் மிகுந்த மரம் தான் ஆவாரை. 

அவாரையின் அற்புத பலன்கள்

 • நம் உடலில் உள்ள கணயத்தை சீர் செய்து இன்சுலின் சுரக்கவும், ரத்த சர்கரையின் அளவை சீராக வைக்கவும் மற்றும் சர்க்கரை நோயினால் ஏற்பட கூடிய பாதிப்புகளை கட்டுபடுத்துகிறது.
 • நோய்கள் ஏற்பட காரணமான பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழித்து நம் உடலின் முக்கிய உறுப்புகள் கல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்களை பாதுகாக்க உதவுகிறது.
 • இரத்தத்தை சுத்தம் செய்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
 • மலச்சிக்கலை சரிசெய்ய உதவுகிறது
 • அதிகபசி, தாகத்தை கட்டுபடுத்தி, உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.
 • காலில் ஏற்படும் எரிச்சல்,குடைச்சல், மறுத்து போதல் மற்றும் தோல்களில் ஏற்படும் அரிப்பை குறைக்க உதவுகிறது.
 • சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்களை விரைவில் குணபடுத்தி கால் அழுகல் நோய் வாராமல் தடுக்க உதவுகிறது.
 • கண்பார்வை மங்குதல், சிவத்தல் மற்றும் எரிச்சலை கட்டுபடுத்தி கண்பார்வை மேம்பட உதவுகிறது.
 • இதயத்தின் தசைகளை வலுபடுத்தி ரத்த கொதிப்பை சீராக்க உதவுகிறது.
 • சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்து, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் தொற்று மற்றும் எரிச்சலை போக்க உதவுகிறது.
 • இதன் பூக்களை காயவைத்து காலையில் ஆவரம் டீ தயாரித்து அருந்தலாம் . இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதனுடன் நாவற்பழத்தின் கொட்டையையும் சேர்த்து பயன் படுத்தலாம் .அதிக பயன் தரும் .
 • ஆவாரையின் பஞ்சாங்க (வேர்இலைபட்டைபூகாய்) சூரணம் 10 கிராம் வீதம் காலைமதியம்மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம்மதுமேகம்மித்தாகம்மிகுபசிஉடல் மெலிவுஉடல் எரிச்சல்உடல் முழுதும் வேதனைபலக்குறைவுமயக்கம்மூச்சுத் திணறல்ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.
 • ஆவாரை சதைநரம்புஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்கறை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.
 • இதன் பூவை இனிப்புடன் கிளறி அல்வா செய்து சாப்பிட வெள்ளைமூத்திர ரோகம்,குறி எரிச்சல் நீங்கும்.

உட்கொள்ளவேண்டிய உணவுகள்

3 வேளை உணவை 6 வேளையாக பிரித்து உட்கொள்ளவும்.

தர்பூசணி, கொய்யா, பப்பாளி, நாவல் பழம், வெள்ளரிக்காய், பச்சை கீரை வகைகள், காலிப்ளவர், முட்டைகோஸ், பீன்ஸ், முள்ளங்கி, பாகற்காய், வெங்காயம், கோவைக்காய், நூல் கோஸ்,  வெண்டை, தக்காளி, முளை கட்டிய தானிய வகைகள், ஓட்ஸ், மஞ்சள், சிறு தானிய வகைகள் ஆகியவை அதிகம் உட்கொள்ளவும்.

தவிர்க்க வேண்டியவை

சர்க்கரை, இனிப்பு, சாக்லேட், ஐஸ்கிரீம், குளிர் பானங்கள், வாழை, சப்போட்டா, மாம்பழம், பலாப்பழம், உருளை, நெய், ஜாம், வெண்ணெய், பரோட்டா, இறைச்சி, பொறித்த உணவுகள், மைதா, அரிசி, மதுபானம், பீடி, புகையிலை பொருட்கள்.

எங்கள் இணையதள இயற்கை ஆவாரை உணவுகள்

Leave a comment