விளக்கெண்ணெய், விளக்கெரிக்க மட்டுமல்ல

ஆமணக்கு... வறண்ட நிலத்தில் கூட நன்கு வளரும் தாவரம். பெரும்பாலும் விதைகளுக்ககதான் இது பயிரிட படுகிறது. 16 வகையான ஆமணக்கு வகைகள் இருப்பினும் சிற்றாமணக்கு, பேராமணக்கு, செவ்வாமணக்கு, காட்டாமணக்கு என்ற நான்கு வகைகள் தான் எளிதில் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. உள் மருந்துகளுக்கு சிற்றாமணக்கு எண்ணெய், வெளிபூச்சுகளுக்கு ஆமணக்கு எண்ணெய் என எடுத்து கொள்ள வேண்டும்.

6௦ ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நல்லெண்ணெய் மற்றும் ஆமணக்கு ( விளக்கெண்ணெய் ) எண்ணெய் மட்டுமே மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது.  வயல்வெளி, ஆறு, வாய்கால் மற்றும் ஏரி கரைகளில் தன்னிச்சையாக வளர்ந்து கிடந்த சிற்றாமணக்கு செடிகளில் இருந்து விதைகளை மக்களே சேகரித்து எண்ணெய் தயாரித்து அதையே சமையலுக்கும், வலிகள் தீர்க்கும் தைலமகவும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த எண்ணெய் புகை இன்றி எரிய கூடியது. அதனால் இதை விளக்கு எரிக்க பயன்படுத்தினர். ஆகவே ஆமணக்கு எண்ணெய், "விளக்கெண்ணெய்" என ஆனது.

மருத்துவபலன்கள்

பருப்பு வேகவைக்கும் போது அதில் இரண்டு துளிகள் விளக்கெண்ணெய் விட்டால், பருப்பில் உள்ள வாயு நீங்கும்.

குழந்தை முதல் பெரயவர்கள் வரை அனைவருக்குமான சிறந்த குளியல் எண்ணெய் இது.

இரவு படுக்கும் முன் 3 முதல் 5 துளிகள் வரை எடுத்து கொள்ள மலச்சிக்கல் நீங்கும். சிறந்த மலமிளக்கி.

வாத நோய்களுக்கு ஆமணக்கு விதை கொண்டு ஒற்றடம் கொடுத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஆமணக்கு இலைகளில் பசு நெய் தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்து கட்டி வந்தால் இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.

கண் வலி மற்றும் கண்ணில் தூசி, மண் சிவப்புக்கு கண்ணில் ஒரு துளி விளக்கெண்ணெய் விட, சரியாகிவிடும்.

ஒரு கைப்படி ஆமணக்கு இலை, அரைத்தேக்கரண்டி சீரகம், 2 கிராம் பச்சைக்கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு காலை மற்றும் மாலை 3 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள மஞ்சள் காமாலை குணமாகும்.

 ஆமணக்கு இலைகளை, ஆமணக்எண்ணெயில் வதக்கி பொறுக்ககூடிய சூட்டில் அடிவயிற்றில் வைத்து, ஒரு பட்டைதுணியால் தளர்வாக கட்டி வைத்தால், மாதவிடாயினால் வரும் வயிற்று வலி 15 நிமிடங்களில் குறையும்.

 

 தகவல் - பசுமை விகடன்

 

Leave a comment