பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாட்களுக்கு அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு 7 நாட்கள் வரை திட்டு திட்டான ரத்தபோக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரபோக்கின் நிறம், அளவு மற்றும் இரண்டு மாதவிடாயிக்கு இடைப்பட்ட நாட்கள் எனப்பொதுவான வரைமுறையில் இருந்து மாறுபடும் போது, அவை ஆரோக்கிய குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்.
அதிகளவு உதிரபோக்கு ஏற்படுத்தும் என்டோமெட்ரியாசிஸ் [ Endometeriosis ]
மாதவிடாய் உதிரம் அடர்த்தி அதிகமாகவும் அதிகளவும் வெளியேறினால், கருப்பையின் என்டோமெட்ரியாசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறிகின்றன எனக்கொள்ளலாம்.
மாதவிடாய் மாயமாகும் அமனோரியா [ Amenorrhoea ]
சிலருக்கு கர்ப்பம் தரிக்காமலேயே மாதவிடாய் நின்று போகலாம். சீரான சுழற்சியின்றிப் பின்னர் வெளியேறலாம். ஹார்மோன் சமசீரின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு இருக்கலாம்.
பயமுறுத்தும் பிசிஓடி [ PCOD ]
சீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி, மாதவிடாய் ஒரே நாளில் முடிவது, தொடர்ச்சியான மாதவிடாய் நாட்கள் இவையெல்லாம் பிசிஓடி எனப்படுகின்ற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சனையின் அறிகுறிகள். இதற்கு காலம் தாழ்த்தாத மருத்துவ சிகிச்சை அவசியம்.
வலிதரும் பைப்ராய்டு [ Fibroid ]
சிலருக்கு அதிக வலியோடு மாதவிடாய் நிகழும். இதற்கு கர்ப்பபையில் இருக்கும் பைப்ராய்டு கட்டிகளும் காரணமாகலாம். இதனால் மாதவிடாய் ஒழுங்கற்று 2௦ நாள்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். இந்தக் கட்டிகள் பெரிதாகும் போது உதிரபோக்கு அதிகமாகும்.
துர்நாற்றமா? கவனம் தேவை
மாதவிடாய் சிலருக்குத் துர்நாற்றத்துடன் வெளியேறலாம். அதை அலட்சியபடுத்தாமல் அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு மாதவிடாய் முறையற்று 15 முதல் 2௦ நாள்களுக்கு ஒரு முறை என ஏற்படும். இதனால் ரத்த சோகை ஏற்படலாம்.
மெனோபாஸுக்குப் பின்னரும் உதிரபோக்கு
மெனோபாஸுக்குப் பின்னரும் உதிரபோக்கு தொடர்ந்தால் அது கர்ப்பப்பை வாய்ப்புற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
1 comment
James mosher
I stumbled across a comment while scouring the internet. I am suffering from erectile dysfunction, which was the same situation i found on the post , i ordered mine and same with me today am cured ,if you also need his assistance , You meant go through his website: https://bubaherbalmiraclem.wixsite.com/website Or reach via mail: buba.herbalmiraclemedicine@gmail.com or his Facebook Page ;https://www.facebook.com/profile.php?id=61559577240930 . AND THANK ME LATER