மூலிகைப் பொடிகளும் அதன் பயன்களும்

அருகம்புல் பொடி

தினமும் அதிகாலையில் ஐந்து கிராம் அளவுள்ள அருகம்புல் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்.

குணமாகும் நோய்கள்

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், இரத்தப்புற்று நோய், இருமல், வயிற்று வலி, மூட்டு வலி ஆகியவை குணமாகும்.

மேலும் ஆரோக்கிய டானிக்காக செயல்படும் அருகம்புல் பொடியானது அலர்ஜி, நரம்பு தளர்ச்சி, உடல் கனம் ஆகியவற்றை குறைக்கும்.வாய்வு கோளாறு, தோல்நோய் போன்றவற்றை நீக்கும். ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.இரத்தம் சுத்தம் செய்யப்படுவதால் எந்த விதமான நோயும் அணுகாது.

வல் 

தினமும் காலை, மதியம் சாப்பாட்டுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள வல் பொடியை நீர் மற்றும் தேனில் கலந்து காப்பிக்கு பதிலாக சாப்பிடலாம்.

குணமாகும் நோய்கள்

ஞாபக சக்தி, மூளை வளர்ச்சி, நரம்பு தளர்ச்சி, புற்றுநோய், மஞ்சள் காமாலை, தொழுநோய், வாதநோய், நீரழிவு, சளி, சிறுநீர் பிரச்சனை, மாதவிடாய், யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்க வல்லது.

வில்வப்பொடி

தினமும் காலை உணவுக்கு பின் இரண்டு கிராம் அளவுள்ள வில்வப்பொடியை தேன் மற்றும் நீரில் கலந்து சாப்பிடலாம்.

குணமாகும் நோய்கள்

நீரழிவு, புற்றுநோய், காய்ச்சல், தலைவலி, இரத்தசோகை, காமாலை, சீதபேதி, காலாரா ஆகியவை குணமாகும்.

துளசிப்பொடி

தினமும் காலை உணவுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள துளசிப்பொடியை நீரில் கலந்து சாப்பிடலாம் அல்லது தேனில் கலந்து பானமாகவும் சாப்பிடலாம்.

குணமாகும் நோய்கள்

இரத்த அழுத்தம், சளி, உடலின் வெப்பம் ஆகியவை குறையும். மூளைக் களைப்பைப் போக்கும், பசியை தூண்டும், குடல்புண், இருமல், காய்ச்சல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காது வலி, ஜீரண கோளாறு ஆகியவற்றை குணமாக்கும். மேலும் மூளையைப் பயன்படுத்தி வேலைப்பார்ப்பவர்களுக்கு சிறந்த டானிக்காக செயல்படுகிறது.

நெல்லிப்பொடி

தினமும் காலை உணவுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள நெல்லிப்பொடியை நீரில் கலந்து சாப்பிடலாம் அல்லது தேனில் கலந்து பானமாகவும் சாப்பிடலாம்.

குணமாகும் நோய்கள்

கண் சம்பந்தமான நோய்கள், முடி வளர்ச்சி, மூக்கு சம்பந்தமான நோய்கள், இருமல், தும்மல், சளி, பல்நோய்,மலச்சிக்கல், அஜீரணம், இதயம் சம்பந்தமான நோய்கள், சீத பேதி, இரத்த பேதி, நீரழிவு, புற்றுநோய், தோல் சம்பந்தமான நோய்கள், பித்தம், மேகவெட்டை, மது அருந்துவதால் வரும்நோய் ‌ஆகியவற்றை குணமாக்க வல்லது.

மேலும் இப்பொடி இளமையை நீடிக்க வைக்கும் வைட்டமின் டானிக்காக செயல்படுகிறது.

ஆவரம் பூ பொடி

தினமும் காலை உணவுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள ஆவரம் பூ பொடியை நீர் மற்றும் கருப்பட்டியில் கலந்து காப்பிக்கு பதிலாக சாப்பிடலாம்.

குணமாகும் நோய்கள்

காபி, டீ, குடி பழக்கத்தை மாற்றும். மேகவெட்டை, உடலின் வறட்சி மற்றும் சோர்வு ஆகியவற்றை நீக்கும். நீரழிவு, கண்‌ சம்பந்தமான நோய் ஆகியவற்றை குணமாக்கும். மாதவிலக்கு நோய்களை நீக்குவதில் சிறந்தது.

வெந்தயப்பொடி

தினமும் காலை, மதியம் உணவுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள வெந்தயப்பொடியை நீரில் கலந்து சாப்பிடவும்.

குணமாகும் நோய்கள்

நீரழிவு, குடல்புண், புற்றுநோய், உடலின் வெப்பநிலை ஆகியவற்றை குறைக்கும்.வயிற்று வலி நீங்கும். நார்ச்சத்து நிறைந்த இரும்பு டானிக்காக இவை செயல்படுகிறது.

ஆடாதோடை பொடி

காலை, மதியம் உணவுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள ஆடாதோடை பொடியை பெரியவர்களுக்கு வெந்நீரிலும் சிறுவர்களுக்கு தேனிலும் கலந்து கொடுக்க வேண்டும்.

குணமாகும் நோய்கள்

சளியை நீக்கும். ஆஸ்துமா நோய்க்கு மிகவும் சிறந்தது.

முசுமுசுக்கை பொடி

காலை, மாலை உணவிற்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள முசுமுசுக்கை பொடியை நீரில் கலந்து சாப்பிடவும்.

குணமாகும் நோய்கள்

நுரையீரல் சம்பந்தமான நோய், சுவாசம் சம்பந்தமான நோய், சளி, உடல் தளர்ச்சி, தீராத இருமல் ஆகியவற்றை குணமாக்க வல்லது.

அகத்தி இலை பொடி

காலை, மாலை உணவிற்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள அகத்தி இலை பொடியை நீரில் கலந்து சாப்பி்டவும்.

குணமாகும் நோய்கள்

இப்பொடியானது வைட்டமின் ”டி” சுண்ணாம்பு சத்து நிறைந்தது. இதனால் பித்தம் தணியும். இதயம் பலப்படும். பசியை தூண்டும். சிறந்த மலமிளக்கியாக செயல்படும்.

கல்யாண முருங்கை பொடி (முள் முருங்கை)

தினமும் காலை, மாலை உணவிற்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள கல்யாண முருங்கை பொடியை நீரில் கலந்து சாப்பிடவும்.

குணமாகும் நோய்கள்

சுரம், பித்தம், சிறுநீர் எரிச்சல், மலட்டுத்தன்மை ஆகியவை குணமாகும். உடல் பருமன் குறையும்.முடிநரைக்காமல் இருக்க உதவுகிறது.

செம்பருத்தி பொடி

காலை, இரவு உணவிற்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள செம்பருத்தி பொடியை நீர் அல்லது தேனில் கலந்து சாப்பிடவும்.

குணமாகும் நோய்கள்

பெண்களுக்கு மாதவிடாய் தொல்லைகள் நீங்கும். சிறுநீர் பிரச்சனைகளையும், உடலின் ‌உள்பாகங்கள் மற்றும் வெளிப்பாகங்களில் உள்ள வீக்கங்களையும் குணப்படுத்தும். உடலுறுப்புகளின் மேலுள்ள முக்கியமான சவ்வுகளை பாதுகாக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்புசத்தை குறைக்கும். சர்க்கரை நோயைக் குணப்படுத்தும். இதய‌நோய்க்கு நல்லது.

முடக்கற்றான் பொடி

மதியம் மிளகு ரசத்தில் முடக்கத்தான் இலை பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும் அல்லது நீரில் கலந்து சாப்பிட வேண்டும். குறிப்பாக தினமும் காலை, மதியம் உணவுடன் சாப்பிட வேண்டும்.

குணமாகும் நோய்கள்

மூட்டு வலி, கை, கால் வலி, முதுகு வலி ஆகியவற்றை குணமாக்கும். வாத சம்பந்தமான நோய்க்கு மிகவும் நல்லது.

தாமரைப் பூ பொடி

இப்பொடியை தேனில் கலந்தும், கருப்பட்டியில் சேர்த்தும் காபி போல் குடிக்கலாம் அல்லது நீரில் கலந்து குடிக்கலாம். தினமும் இரண்டு வேளை சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

குணமாகும் நோய்கள்

இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். இதயத்தைப் பலப்படுத்தும். மூளை சோர்வை போக்கும். அடிக்கடி வலிப்பு நோய் உள்ள குழந்தைக்கு நல்லது.

கண்டங்கத்திரி பொடி

தினமும் காலை, மதியம் உணவுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள கண்டங்கத்திரி பொடியை நீரில் கலந்து இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.

குணமாகும் நோய்கள்

காசநோய், ஆஸ்துமா, மார்பு சளி, காய்ச்சல், தொழுநோய், இரத்த அழுத்தம், பக்கவாதம், கல்லீரல் சம்பந்தமான நோய், மூளை சம்பந்தமான நோய், கண் சம்பந்தமான நோய்கள், காது சம்பந்தமான நோய்கள், ஆகியவற்றை குணமாக்க வல்லது.

தூதுவளை பொடி

காலை, மதியம் உணவுக்கு பின் ஐநது கிராம் அளவுள்ள தூதுவளை பொடியை நீரில் கலந்து இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.

குணமாகும் நோய்கள்

நரம்பு தளர்ச்சி, மார்பு சளி, ஞாபக சக்தி, காது நமச்சல் பசியின்மை, உடல் பருமன் குறைதல் ஆகியவைகளை குணமாக்கும். தோல்நோய்கள் மற்றும் குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கு நல்லது.

மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி

தினமும் காலை, மதியம் உணவுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடியை நீரில் கலந்து இரண்டு வேளை சாப்பிடவும்.

குணமாகும் நோய்கள்

சிறுநீரக கோளாறு, ஞாபக சக்தி, மஞ்சள் காமாலை, கண் சம்பந்தமான நோய்கள், கல்லீரல் சம்பந்தமான நோய்கள், ரத்த சோகை முதலியவற்றைக் குணமாக்க வல்லது.

குப்பைமேனி பொடி

காலை, மதியம் உணவுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள குப்பைமேனி பொடியை நீரில் கலந்து இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.

குணமாகும் நோய்கள்

மன அழுத்தம், தீப்புண், ரேபிஸ், உடம்பில் உள்ள கிருமிகள் ஆகியவற்றை அகற்றும். பாம்பு கடி, மூட்டு வாதம், தோல் நோய்கள், மூலம் ஆகியவற்றிற்கு இந்தப்பொடியை பயன்படுத்தலாம்.

தும்பைப்பொடி

காலை, மதியம் உணவுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள தும்பைப்பொடியை தண்ணீரில் கலந்து இரண்டு வேளை சாப்பிடவும்.

குணமாகும் நோய்கள்

பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்பு சளி, மூட்டுவாதம் ஆகியவற்றை குணமாக்கும். ‌ மேலும் பாம்பு கடிக்கு தும்பை பொடியும், வாழைத்தண்டும் கலந்து கொடுப்பது நல்லது.

கடுக்காய் பொடி

இரவு சாப்பாட்டிற்கு பின் ஒரு மணி நேரம் கழித்து கடுக்காய் பொடியை நீரில் கலந்து பருகவும்.

குணமாகும் நோய்கள்

மலச்சிக்கல், குடல் புண், குடல் தசை ஆகியவற்றை நீக்கும். இரத்தம் சுத்தமாகும்.

வாதநாறாயண பொடி

காலை, மதியம் உணவுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள வாதநாறாயண பொடியை நீரில் கலந்து இரண்டு வேளை சாப்பிடவும்.

குணமாகும் நோய்கள்

வாதம், கை, கால் வலி, உடம்பு வலி, தேகஉஷ்ணம், பக்கவாதம், மூட்டு வலி ஆகியவற்றை நீக்கும்.

துத்திப்பொடி

காலை, மதியம் உணவுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள துத்திப்பொடியை நீரில் கலந்து இரண்டு வேளை சாப்பிடவும்.

குணமாகும் நோய்கள்

மூலநோய், அதிக வெப்பம், மலச்சிக்கல், சிறுநீர் பிரச்சனை, புண், கட்டி, இரத்த வாந்தி, இருமல், பல்வலி ஆகியவற்றை குணமாக்கும். ஆண்மை அதிகரிக்கும்.

திரிபலா பொடி

தினமும் இரவு உணவுக்கு பின் ஐந்து கிராம் அளவுள்ள திரிபலா பொடியை நீரில் கலந்து சாப்பிடவும்.

குணமாகும் நோய்கள்

மூலம், மலச்சிக்கல், இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான நோய், கண்பார்வை முதலியவைகளுக்கு நல்லது.

வெள்ளறுகு பொடி

தினமும் காலை, மதியம் உணவுக்கு பின் 2.5 கிராம் அளவுள்ள வெள்ளறுகு பொடியை நீரில் கலந்து இரண்டு வேளை சாப்பிடவும்.

குணமாகும் நோய்கள்

இவை இரத்தத்தை சுத்தம் செய்யும். பால்வினை நோய்களினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும். கால் வீக்கம், தோல் சம்பந்தமான நோய்கள் மற்றும் விஷக்கடி ஆகியவற்றை குணப்படுத்தும்.

சிறு குறிஞ்சான் பொடி

தினமும் மாலை ஐந்து கிராம் அளவுள்ள சிறு குறிஞ்சான் பொடியை நீரில் கலந்து சாப்பிடவும்.

குணமாகும் நோய்கள்

நீரழிவு, விஷக்கடிமற்றும் இதயம் சம்பந்தமான நோய் ஆகியவற்றை குணமாக்க வல்லது. மேலும் மாதவிலக்கு சரியாக வராதவர்களுக்கு கைகண்ட மருந்தாக செயல்படுகிறது.

அதிமதுரம் பொடி

தினமும் காலை உணவுக்கு பின் அதிமதுரம் பொடியும், ஆடாதோடை பொடியும் சேர்த்து ஒரு கிராம் தேனில் அல்லது நீரில் கலந்து சாப்பிடவும்.

குணமாகும் நோய்கள்

இருமல், சளி, ஆஸ்துமா மற்றும் தொண்டை சம்பந்தமான நோய்கள் ஆகியவற்றை குணமாக்க வல்லது.

முருங்கைக்கீரை 

இரத்தக்கொதிப்பு, ஆண்மைக்குறைவு, கண் சம்பந்தமான நோய்கள், சளி, இருமல் ஆகியவற்றைக் குணமாக்கும்.

கீழாநெல்லி

ஈரல் சம்பந்தமான நோய்கள், அஜீரணம், சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை, இரத்த சோகை முதலியவற்றைக் குணமாக்கும்.

மணத்தக்காளி

மாதவிடாய் கோளாறுகள், வயிற்றுப்புண்கள், புற்றநோய், ஈரல் சம்பந்தமான நோய்கள், வாய்வு கோளாறு, வரட்டு இருமல், ஞாபக சக்தி குறைவு, வயிற்று வலி, குடல் புண்கள் ஆகியவற்றைக் குணமாக்க வல்லது.

”உணவே மருந்து மருந்தே உணவு” என்ற பழமொழியை உணர்ந்து மூலிகை குணங்களை கொண்ட இந்த பொடி வகைகளை உணவில் கலந்து உண்போம்;

உலகில் நோயின்றி வாழ்வோம்.

1 comment

surya

surya

நன்றி!, மிகவும் பயனுள்ள பதிவு.

அனைத்து விதமான நோய்கள், உடல் உபாதைகள் மற்றும் ஆரோக்கிய பானம் தயாரிக்கும் எளிய வீடு மருத்துவ குறிப்பு மற்றும் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

https://naturalhomeremediesfor.com/

#homeremedies #health #naturalhealth #ayurveda #siddha

Leave a comment