பொடுகைப் போக்கும் பொடுதலை

.கூந்தலைப் பற்றி பல காப்பியங்களிலும், இதிகாசங்களிலும் அதிகம் வர்ணிக்கப்படுகிறது. நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் எவரும் இருக்க முடியாது. நம் முன்னோர்களில் ஆண்களும், பெண்களும் பாரபட்சமின்றி கூந்தல் வளர்த்தனர். நாகரிகம் வளர வளர இன்று பெண்கள் கூட கூந்தலை கத்தரித்து விட்டு மிக குறைந்த அளவே முடிவைத்துக் கொள்கின்றனர்.

இன்றைய நவீன இரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் பருவ மாற்றங்களால் நீண்ட கூந்தல் என்பது சில பெண்களுக்கு கனவாக அமைந்து விடுகிறது.

கூந்தல் பராமரிப்பு 

கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல, அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் தீங்கு தரும் இரசாயனக் கலவையிலான ஷாம்புக்களை பயன்படுத்தி கூந்தலை இழக்கின்றனர். முடி உதிர்வதை தடுக்கவும், நீண்ட நெடிய கூந்தலை பெறவும் பொடுகு தொல்லை இல்லாமல் இருப்பது அவசியம். பொடுகினால் தான் அநேகம் பேருக்கு முடி உதிர்கிறது. தலையில் அரிப்பு இருந்தாலே பொடுகு இருக்கிறது என்று உணர்ந்து கொள்ளலாம்.

பொடுகு எவ்வாறு உண்டாகிறது?

பொடுகு என்பது ஒருவகை நுண்ணிய கிருமிகளினால் தலையில் உண்டாகும் நோய். இந்த நோய் தாக்கினால் தலையில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு உள்ள இடத்தை சொறிந்தால் தவிடு போல் தலையிலிருந்து உதிரும்.

பொடுகு வராமல் தடுக்க 

 

  • பொடுகு வராமல் தடுக்க மற்றவர்கள் பயன்படுத்திய சீப்பைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். 
  • வாரம் இருமுறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
  • நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சிறிது முறையாக உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இந்தக் கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய்ப் பசை கிடைக்கிறது. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடியைக் காப்பாற்றலாம்.
  • இக்காலத்தில் ஆண்பெண் பாரபட்சமின்றி பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும். 
  • தேங்காய் எண்ணெயில் பொடுதலை இலைகளை போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். 
  • முடி இருப்பவர்களுக்கு எல்லாம் பொடுகு ஒரு பெரும் பிரச்சனையாகும். பொடுகுஉள்ளவர்களுக்கு முடி உதிரும்எத்தனை தைலங்கள் தேய்த்தாலும் குணமாகாது. பொடுதலை150 கிராம்தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம்வெந்தயம் 50 கிராம் மூன்றையும் இடித்து இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு அதில் மேற்படி சரக்கை கலந்து சிறு தீயில் எரிக்கவும். நீர் சுண்டி தீயாமல் மிதக்கும் பக்குவத்தில் இறக்கிஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும்இதை தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில்தேய்த்து தலைவாரிக் கொள்ள வேண்டும். 
  • பொடுகுக்கு மேற்பூச்சு மட்டும் முழு பலனளிக்காது. உள்ளுக்கும் பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கி, புளி, உப்பு, மிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட பொடுகுகுணமாகும். 
  • பொடுதலை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வந்தால் தலையிலுள்ள சொறி, சிரங்கு குறையும்.

 

 

எங்கள் இணையத்தளத்தில் பொடுதலைப் பொடி மற்றும் பொடுதலை எண்ணெய் ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும்

Leave a comment