பற்பசைக்கு விடைகொடுங்கள்... மூலிகை பற்பொடி பயன்படுத்துங்கள்!

விதவிதமான `டூத்-பிரஷ்களும்’, வண்ண வண்ண `டூத்-பேஸ்ட்களும்’ பயன்படுத்தப்பட்டாலும் இன்றைய தலைமுறைக்கு 30 வயதிலேயே பற்கள் ஆட்டம் காண்பதும், சொத்தை உண்டாக்கக்கூடிய கிருமிகள் பற்களில் குடியிருப்பதும், பல் கூச்சம் அதிகமாவதும் ஏன்?

பற்பசைகளும், பிரஷ்களும் இல்லாத அந்தக் காலத்திலேயே நம் முப்பாட்டன்களும் பாட்டிகளும் பற்களை நன்றாக பராமரித்தது எப்படி? ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி!’ என்பது முதுமொழி. அதற்கேற்ப இயற்கை மூலிகைக் குச்சிகளையும், அவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகைப் பற்பொடியையுமே பயன்படுத்தினார்கள். 

 

ஏன் பற்பசை கூடாது?

இன்றைய நவீன பற்பசை தயாரிப்பில் மூன்றே மூன்று புளோரைடுகள் தான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சோடியம் புளோரைடு (Sodium Fluoride, NaF), ஸ்டன்னஸ் புளோரைடு (Stannous Fluoride, SnF2), சோடியம் மோனோபுளோரோபாஸ்பேட் (Sodium Mono-fluoro-phosphate, Na2Po3F) ஆகியனவாகும். பற்பசை தயாரிக்கும் நிறுவனங்களைப் பொறுத்து பயன்படுத்தப்படும் புளோரைடும் மாறுபாடடைகிறது. பெரும்பாலான நிறுவனங்களால் சோடியம் புளோரைடு மற்றும் சோடியம் மோனோ-புளோரோபாஸ்பேட் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை பற்களை சுத்தம் செய்வதில் சிறப்பாகச் செயல்பட்டாலும் கூட தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் போது ஈறுகளைத்(Enamel) தாக்கும் தன்மை கொண்டவை. இவை அலுமினியத் தொழிற்சாலைகளில் விஷக் கழிவுகளாக வெளியேறுபவை. இவை எலி பாஷாணத்திலும், பூச்சி மருந்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. இவைகளையே ப்ளோரைடு தேவைக்காக பற்பசையில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு ஸ்டன்னஸ் புளோரைடு கொண்டு தயாரிக்கப்பட்ட பற்பசைகளே சிறந்தவை. இவை சற்று விலை அதிகமாக இருந்தாலும் இவற்றை பயன்படுத்துவதே பற்களுக்கும் ஈறுகளுக்கும் நல்லது.

 

பற்பொடி - ஒரு வரலாற்றுப் பார்வை

கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்த இந்திய மக்களிடம் தான் உலகில் முதன் முதலில் பல் துலக்கும் பழக்கம் இருந்ததாக அறியப்படுகிறது. முதலில் குருமணலை பல் துலக்குவதற்காக பயன்படுத்திய இவர்கள் பிறகு எரிந்த மரங்களின் சாம்பலை விரலால் தொட்டு பல் துலக்கும் அளவிற்கு சிந்து சமவெளி மக்கள் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்திருந்தனர். கெளதம புத்தர் காலத்தில் வேப்பமரக் குச்சிகளை பல் துலக்கப் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. இந்தியர்கள் கருவேலங்குச்சி, ஆலங்குச்சி, வேப்பமரத்துக் குச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்துள்ளனர்.

பின்பு கி.மு ஐந்தாம் நூற்றாண்டுகளில் சில வணிகர்களின் வாயிலாக இந்தியர்களிடமிருந்து பல் துலக்கும் பழக்கம் சீனா மற்றும் எகிப்திய மக்களை எட்டியது. சில நூற்றாண்டுகள் வரை சாம்பலை பயன்படுத்திய எகிப்தியர்கள், அன்றாடம் பல் துலக்குவதற்கு சாம்பல் உகந்தது அல்ல என்பதை அறிந்து பல்துலக்க தனியாகப் பொடி தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, உப்பு, புதினா இலை, ஐரிஸ் மலர், மிளகு ஆகியவற்றுடன் இருபது வகையான தானியங்களைச் சேர்த்து பொடியாக்கி கி.பி நான்காம் நூற்றாண்டில் உலகின் முதல் பற்பொடியை தயாரிப்பதில் எகிப்தியர்கள் வெற்றியடைந்திருந்தனர். அரச வம்சத்தினர் மட்டும் பயன்படுத்திய இந்த பற்பொடியின் தயாரிப்பு முறை பற்றிய குறிப்புகள் பாப்பிரசு தாள்களில் எழுதப்பட்டன. அவற்றில் சில பாப்பிரசு தாள்கள் இன்றும் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

 

இயற்கை வழிமுறைகள்

  • சிறிது வறுத்த ஓமத்தின் பொடி, மாசிக்காய், லவங்கப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மிளகு ஆகியவற்றின் பொடிகளைப் பயன்படுத்தலாம்.
  • லவங்கம், சீரகம் ஆகியவற்றை லேசாக வறுப்பாக வறுத்துப் பொடி செய்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் தேய்த்தால் அஜீரணம், வாந்தி போன்றவை குணமாகும்.
  • திரிபலா சூரணத்தைப் பற்பொடியாக தினமும் பயன்படுத்தினால் பல் கூச்சம் நீங்கும், பற்களில் நோய்க் கிருமிகள் அண்டாது.
  • கடுக்காய் பொடியால் பல் துலக்க ஈறு வலி, புண், ஈறிலிருந்து குருதி வடிதல் குணமாகும்.
  • கருவக்குச்சிகளை ஒடித்து, அப்படியே பல் துலக்கலாம். இது, ஈறுகளில் உண்டாகும் ரத்தக்கசிவைப் போக்கக்கூடியது. சர்க்கரை நோயையும் குணப்படுத்தும் ஆற்றல்கொண்டது.
  • வேப்பங்குச்சியால் பற்களைத் துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக, பளிச்சென்று இருக்கும். துர்நாற்றம் நீங்கும். அதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமல் காக்கும்.
  • ஆலமரத்தின் குச்சியை உடைத்து அதனைப் பற்களில் தேய்த்துவர பற்கள் உறுதி பெறும். மேலும், ஈறுகளில் வீக்கம், ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

 

மூலிகை பற்பொடிகள்

அற்புதமான மூலிகைகளின் சங்கமத்தில் உருவாகியுள்ள தரமான பற்பொடிகளின் பட்டியல் இதோ, எளிதாக இந்த மூலிகை பற்பொடிகளை நீங்கள் இணையத்தளத்தில் பெறலாம்.

பல்லை விளக்குகிறபொழுது விரலையே உபயோகிப்பதுதான் உன்னதமானது... ஈறுகளின் பலம் இதனால் போனஸாக உறுதி செய்யப்படுகிறது..

 

மூலிகை பற்பொடி செய்முறை

ஒளசதம் (ஔஷதம்) பற்பொடி:

தேவையானவை: 

படிகாரம் - 60 கிராம்
மிளகு -10 கிராம்
சாம்பிராணி - 10 கிராம்
இந்துப்பு - 10 கிராம்
ஓமம் - 5 கிராம்
கிராம்பு - 2.5 கிராம்
வேப்பம்பட்டை - 10 கிராம்.

செய்முறை: 
மேற்கண்ட பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை தினமும் பல் துலக்கப் பயன்படுத்தலாம்.

பலன்கள்: பல்வலி, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், பல் நோய்கள், பல் ஆடும் பிரச்னை, பலவீனமான ஈறுகள் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்கும்.

தந்ததான சூர்ணம்

தேவையானவை: 

கடுக்காய் - 10 கிராம் 
தான்றிக்காய் - 10 கிராம்
நெல்லி முள்ளி - 10 கிராம்
மாசிக்காய் - 15 கிராம்
ஜாதிக்காய் - 15 கிராம்
சுக்கு - 10 கிராம்
மிளகு - 10 கிராமம்
திப்பிலி - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
லவங்கம் - 10 கிராம்
லவங்கப் பட்டை - 10 கிராம்
கற்பூரம் - 10 கிராம்
நெற்பதர் சாம்பல் - 120 கிராம்
நாயுருவி - 100 கிராம்
இந்துப்பு - சிறிது.

செய்முறை: 

கற்பூரம், நெற்பதர் சாம்பல், நாயுருவி தவிர, மேற்கண்ட பொருட்களைத் தனித்தனியாகப் பொடித்து, சலித்துக்கொள்ளவும். பிறகு கற்பூரத்தைப் பொடித்து, பொடித்த பொருட்களோடு கலக்கவும். அதன் பின்னர் சலித்த நெற்பதர் சாம்பலை நாயுருவியுடன் சிறிது இந்துப்பு சேர்த்து அரைத்து பொடித்ததுடன் சேர்க்கவும்.

பலன்கள்: 

பல்லில் சீழ்வடிதல், வாய் துர்நாற்றம், பல் கூச்சம், ஈறு சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.

தந்த ரோகம்

தேவையானவை: 

சுக்கு - 10 கிராம்
காசுக்கட்டி - 10 கிராம்
கடுக்காய் - 10 கிராம்
இந்துப்பு - 10 கிராம்.

இந்த நான்கையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து, பொடி செய்துகொள்ளவும். தேவைப்படும்போது இந்தப் பொடியால் பற்களைத் துலக்கவும். 

பலன்கள்:

பல் ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் ஆடுவது, சொத்தையாவது போன்ற பிரச்னைகள் தீரும். 

 

எங்கள் இணையத்தளத்தில் மேற்கண்ட அனைத்து பற்பொடிகளை பார்வையிட மற்றும் ஆர்டர் செய்ய செல்லவும்.

 

தகவல் : விக்கிபீடியா மற்றும் ஆனந்தவிகடன்

Leave a comment