மூலப்பொருட்கள்
*பன்னீர் ரோஜா
*பனங்கற்கண்டு (சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் இதில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மொத்தம் 24 வகையான இயற்கைச் சத்துகள் நிறைந்துள்ளதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதொரு வரப்பிரசாதமே.)
*தேன்
தினமுமே இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
1.இதயம் பலம் பெறும் மேலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவக்கூடும்.
2. உடலுக்கு குளிர்ச்சியை தரும்.மன அழுத்தம் போக்கும் மருந்தாகவும் இவை செயல்படுகிறது
3. செரிமான கோளாறுகளை நீக்கி பசியை தூண்டுகிறது.
4. அல்சருக்கு மிகவும் நல்லது
5.இரவில் குல்கந்தை பாலுடன் சேர்த்து பருக தூக்கமின்மை போக்கும்.
6.ரத்தம் சுத்தமடைந்து சருமம் பளபளப்பாகும், முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை போக்கும்.
7.மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்த போக்கும் வலியும் குறைந்து நலன் தரும்.
8. குல்கந்து ஆண்மை பெருக்கி என்றும் அழைக்கப்படுகிறது.ஆண்களின் உடலுக்கு வலிமை கிடைக்க இவை உதவுகிறது.
9.மலச் சிக்கலை தீர்க்கும்.
சாப்பிடும் முறை
சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை இரவு உறங்கும் முன்பும் சாப்பிட்டு வரலாம்.
பனங்கற்கண்டு, தேன் & ரோஜா குல்கந்து
