நோயற்ற வாழ்விற்கு தினம் ஒரு மூலிகை பானம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்றும், `வரும்முன் காப்போம்' என்றும் ஆரோக்கியம் பேசும் பழமொழிகள் அதிகம் உள்ள நாம் நாட்டில்தான், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே இருக்கிறது. பெரும்பாலான வீடுகளின் பட்ஜெட்டில் கணிசமான தொகை மருத்துவச் செலவுகளுக்கே போய்விடுகிறது. நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதைவிட, நம் ஊரிலேயே விளையக்கூடிய, எளிதாகக் கிடைக்கும் சில அற்புத மூலிகை பானங்களை அன்றாடம் எடுத்துக்கொண்டாலே, நோயற்ற வாழ்வு நம் வசமாகும். 

உடற்சூட்டைத் தணிக்கும் நன்னாரி 

உடற்சூடு குறையும்.சிறுநீர் எரிச்சல்,சிறுநீர்ப் பாதைத் தொற்றுநோய்கள் குணமாகும். வேனிற்கால பானமாக அருந்தினால் வேனிலை வெல்லலாம்.

ஆரோக்கிய இதயத்திற்கு செம்பருத்தி

செம்பருத்தியின் பூக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் சிறந்ததாகும். இப்பூக்களின் ஜூஸ் பருகுவதன் மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் கொண்டுள்ளதால் உடலில் உள்ள செல் சேதத்தை எதிர்த்து போராடுகிறது. இது இருமல், முடி உதிர்தல் போன்ற சிகிச்சைக்கு உதவி புரிகிறது

வில்வம் இருக்க, செல்வம் எதற்கு?

வில்வ பழத்தை ஜூஸ் செய்து தேன் கலந்து குடித்தால் சளி, இருமல், அஜீரணக் கோளாறு போன்றவை நீங்கும். அதே ஜூஸில் வெல்லம் கலந்து குடித்தால் கடுமையான காய்ச்சல் கூட குணமாகும்.

இளமையோடு அழகா இருக்க மாதுளை 

மாதுளம் பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்தச் சோகையைத் தடுக்க மாதுளம் பழங்கள் உதவும். மாதுளம் பழத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடண்ட், பல்வேறு வகை புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பைத் தருகிறது.மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால்பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல.. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கியம் மேம்பட கற்றாழை 

தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும். மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வரலாம். 

என்றும் குன்றாத இளமை தர நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சரும அழகு தானாக அதிகரிக்கும்.இதிலுள்ள விட்டமின் C, நம்முடைய சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.

நினைவாற்றலை அதிகரிக்க வல்லாரை 

நரம்புகளுக்கு வலிமை தருகிறது. தோல்நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது. குடல் புண்ணை ஆற்றுகின்றது.
நீர்க்கடுப்புக்கு மருந்தாக அமைகின்றது. கண் எரிச்சலைக் குணமாக்குகின்றது. நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கின்றது. 

இதய வியாதிகளுக்கு தாமரை

செரிமானத்தை மேம்படுத்துதல் , குறைந்த இரத்த அழுத்தம், நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க, பல்வேறு வகையான புற்றுநோய், இருப்பு மனநிலை மற்றும் மன அழுத்தத்தை தடுக்கவும், இரத்த ஓட்டம் அதிகரிக்கவும், உடலில் சரியான நொதிப்பு செயல்பாட்டை பராமரிக்கவும் உதவுகிறது.

எங்களது இணையத்தளத்தில் மேற்கண்ட அனைத்து பானங்களையும் வாங்கி நோயற்ற வாழ்வை பெற்றிடுங்கள்.

Leave a comment