நிலவேம்புக் குடிநீர்  சூரணம் இப்பொழுது டானிக் வடிவில்

நிலவேம்புக் குடிநீர்... சமீப காலங்களாக அரசாங்கத்தில் தொடங்கி பாமர மக்கள் வரை  எல்லோரும் உச்சரிக்கும் ஒரு வார்த்தை.  அந்த அளவுக்கு பிரபலமாகியிருக்கிறது நிலவேம்புக் குடிநீர். எந்த நோய்க்கும் நவீனத்தையும் ஆங்கில மருந்துகளையும் நம்பியிருந்த இன்றைய தலைமுறையினரை நமது பாரம்பர்ய மருத்துவத்தின் பக்கம் திரும்ப வைத்த பெருமை  நிலவேம்புக் குடிநீருக்கு உண்டு என்றால் அது மிகையல்ல. டெங்கு, சிக்குன்குனியா போன்ற உயிர்குடிக்கும் நோய்கள் பற்றிய பீதியையும் அதன் மீதான அச்சத்தையும் போக்க நமக்குக் கிடைத்த ஓர் ஆரோக்கிய கேடயமாக இதை பயன்படுத்துகிறோம். அந்த அளவுக்கு நிலவேம்புக் குடிநீர் பிரபலமாகியிருக்கிறது. 

'நிலவேம்புக் குடிநீர்' என்று அழைக்கப்படுவதால், அது நிலவேம்பினை மட்டுமே காய்ச்சித் தயாரிக்கப்படுவது என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், மருத்துவர்களோ நிலவேம்பு அதில் ஒரு மூலப்பொருளாக மட்டுமே உள்ளது. அதற்கு இணையாக மேலும் பல மூலிகைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள். 

மூலப்பொருள்கள்

  • நிலவேம்பு
  • வெட்டிவேர்
  • விலாமிச்சை வேர்
  • சந்தனம்
  • கோரைக்கிழங்கு
  • பேய்ப்புடல்
  • பற்படாகம் 
  • சுக்கு
  • மிளகு

ஆகியவற்றின் கலவையே நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களாகும். இவை அனைத்தும் சேர்ந்த பொடியை நீருடன் சேர்த்து கொதிக்கவைத்து அருந்துவது இன்றைய கணிணி தலைமுறையினருக்கு சற்று சிரமம்தான். 

நிலவேம்பு டானிக் 

தற்போதைய தலைமுறையினருக்கு ஏற்ப நிலவேம்பு சூரணம் டானிக் வடிவில் அனைத்து நாட்டுமருந்து கடைகளிலும் கிடைக்கிறது.

அதில் சில உங்கள் பார்வைக்கு,

1.அன்னை அரவிந்த் " நிலவேம்பு குடிநீர் சிரப் "

2. Dr.Thangas " HIFEV Syrup "

3.JaiSurya Herbals " NILAVEMBU KIYALAM "

 

Leave a comment