சிறுநீரகம் காக்கும் வாழைத்தண்டு சாறு

வாழையில் இருந்து கிடைக்கும் அனைத்து உணவு பொருட்களும் மருத்துவ குணம் உள்ளவை தான். குறிப்பாக வாழைத்தண்டு , சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது.

அந்தக்காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம், என்று அழைத்தனர். தமிழர் கலாச்சாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு முக்கியமான ஒன்றாக இன்றைக்கும் இருந்து வருகிறது. 

சிறுநீரகத்தில் உருவாகும் கல், பெரும் தொல்லை தரும் நோயாக உள்ளது. நீர் சத்து குறைவு மற்றும் போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் சிறுநீரகத்தில் கல் உருவாகிறது. மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைப்பட்டு சிறுநீரகத்தில் கற்கள்  உருவாகிறது.

சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமாகவும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை இருக்கிறது. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாக கரைத்து விடலாம்.  

வாழைத்தண்டு சாறு பயன்கள் 

வாழைத்தண்டு நார் சத்து மிக்க உணவு என்பதால் அதிக உடல் எடை உள்ளவர்கள், நீரழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்பு சத்து இருப்பவர்களுக்கு இது மிக சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. உடலை குளிர்ச்சி அடையவைக்கும் தன்மை இருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. சிறுநீர் எரிச்சலை போக்கும்.

 

                                                                                                    

Leave a comment