சத்தான சத்தல்லவோ ! ரூமி ஸ்பைருலினா  மூலிகை கேப்சூல்

 தசைகள் கட்டமைப்புக்கு, பராமரிப்புக்குப் புரதம் அவசியம். உடலில் புரதசத்து அவசியம். உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும். இந்தியர்கள்  டயட்டில் பொதுவாகப் புரதச்சத்து குறைவாக இருக்கும், இதனால் இந்தியர்களுக்குத் தசைகள் உறுதியாக இருப்பது இல்லை.  புரத்தைச்சத்தை நாம் உணவின் மூலமாகவோ பெற முடியும். தினமும் ஏதாவது ஒரு வகையில் புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும் .

 இது உடல் வளர்ச்சிக்கும், குறைபாடுகளைச்  சரி செய்வதற்கும் அவசியமான ஒன்று.

 உடலில் நீருக்குப் பிறகு அதிகம் இருப்பது புரத சத்துதான். உடல் உறுப்புகள், நகம், தலைமுடி, சருமம் இவை அனைத்திலும் புரதமே உள்ளது. புரதமே திசுக்களின் உருவாக்கத்திற்கு காரணமாகின்றது . அசைவ உணவு , பால், முட்டை இவை முழு புரதம் கிடைக்கக் காரணம் ஆகின்றன. தாவர வகையில் கொட்டை, விதை, பழங்கள் , பருப்புகள் இவை அனைத்து வகைகளையும் கலந்து உன்ன வேண்டும். உருளைக்கிழங்கு , வாழைக்காய், சேனைக்கிழங்கு இவற்றில் குறைந்த அளவே புரதம் உள்ளது.  

புரதத்தின் வேலைகள் 

  •  உடலை  வளர்ப்பது புரதம். தேய்மானங்களைச்  சீர் செய்கின்றது . முடி, சருமம், கண், தசை, உறுப்புகள் இவை அனைத்தும் புரதத்தாலேயே  உருவானவை .  ஆகவேதான் வளரும் குழந்தைகளுக்கு  அதிக புரதம் தேவைப்படுகிறது. 
  •  புரதம், நல்ல சக்தி அளிக்கும். கார்போஹைடிரேட்  இல்லாத சமயத்தில்  புரதச்சத்தை உடல் எடுத்துக் கொள்ளும். 
  •  புரதம் உடலில் சில ஹார்மோன்களை உருவாக்குகின்றது. 
  •  என்சைம்ஸ்  எனப்படுபவை புரதமே. இவை உடலில் இரசாய  மாறுதல்களைத்  துரிதப்படுத்துகின்றன.
  •  ஹீமோகுளோபினும் புரதமே. ஹீமோகுளோபின் தான் ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்கின்றது.
  •  நோய்  எதிர்ப்பு பொருட்களைப்  புரதம் உடலில் உருவாக்குகின்றது.
  •  தாவர வகையில் உடலுக்குத் தேவையான அனைத்துப்  புரதமும் கிடைக்கப் பலவகை தாவர உனைக் கலந்து உன்ன வேண்டும். 

 

புரதக் குறைவு 

 புரதக் குறைவு அநேக பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக செயலின்மை, வளர்ச்சி இன்மை, கல்லீரல் பாதிப்பு,வயிறு, கால்கள் பருத்து இருத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதே போல் அளவுக்கு அதிகமான புரதமும் தீமையே.

புரதம் உடலில் குறைந்தால் 

 தசை சுருங்கி குறையும். கால், கணுக்காலில் நீர் சேர்ந்த வீக்கம் இருக்கும். 

 இரத்த சோகை , நார் சத்து குறைந்து விடுவதால் மலச்சிக்கல் முதல் குடல் புற்று நோய்  வரை ஏற்படும். அதிக அசைவ உணவில் அதிக கொழுப்புடன் கிடைக்கும் புரதம் இருதய பாதிப்பினை ஏற்படுத்தும். அதிக புரதம் சிறுநீரகம், கல்லீரல் இரண்டினையும் அதிக வேலைக்  கொடுத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீர் வறட்சி ஏற்படுத்தலாம்.

 ஆகா, உணவிலிருந்தே புரதம் பெற வேண்டும். ஆயினும் மிக அதிக புரதம் குறைந்த கார்போன் ஹைடிரேட்  முறையான உணவாகாது.

 இதனைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் ரோஹிணி வழங்கும் ரூமி ஸ்பைருலினா  மூலிகை கேப்சூல் இது புரதச்சத்து நிறைந்த நீர்த் தாவரம் . இது வயது முதிர்ந்தோர்க்கு மிகுந்த ஊட்டச்சத்து அளிக்கிறது. உடலைத் தேற்றும் காயகற்ப மூலிகைகளின் தன்மை கொண்டது. மேலும் ரூமி ஸ்பைருலினா  பிளஸ்  கேப்சூல் ஊட்டச்சத்து மூலிகை கேப்சூல் இதில் ஸ்பைருலினா, நெல்லி, அமுக்கிரா, போன்ற மூலிகைகள்  அடங்கியுள்ளது. இது நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் புரதச் சத்து அளிக்கிறது. நுண் ஊட்டச்சத்து , தாதுக்கள், வைட்டமின்கள், தாவர உயிர்ச்சத்துக்கள் முதலியவற்றை அளிக்கிறது. இரத்த ஓட்ட மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

Leave a comment