குழந்தையின் ஆரம்பகால நோய்களைச் சமாளிக்க, உரை மாத்திரை

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி தினமும் உலகளவில் 16,000 குழந்தைகள் மரணமடைவதாகக் கூறப்படுகிறது. அதில் 83%மரணம் கிருமி தொற்றுவினால் ஏற்படுகிறது என்பது வருத்தத்தை கொடுக்ககூடிய செய்தியாகும்.சிறு குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால் சீக்கிரத்தில் நோய் தொற்றுவிற்காளாகிறார்கள். கிராமங்களில் குழந்தைகளுக்கு உரசு மருந்து என்று தனித்தனியே சில மருந்து சரக்குகளைத்தாய்ப்பாலில் உரைத்து குழந்தைகளின் நாவில் தடவும் வழக்கம் இன்றுவரை தமிழகம், கேரளம் மற்றும் இலங்கையில் உள்ளது.நகர்ப்புறங்களிலும் சிலர் இதனை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

சித்த மருத்துவத்தில் சிறு குழந்தைகளுக்கு மிக சிறந்த மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒன்று உரை மாத்திரை.அக்கரகாரம், அதிமதுரம், சிற்றரத்தை, கடுக்காய், சாதிக்காய், மாசிக்காய், வசம்பு, சுக்கு, வெள்ளைப்பூண்டு,பெருங்காயம்,திப்பிலி இவற்றை ஹோஸ்பிடல் பார்மகோபியா என்னும் நூலில் கூறபட்டபடி எடுத்து தூய்மை செய்து பொடித்து நீர் விட்டு அரைத்தது விரல் அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் நன்றாக காய வைத்து, இம்மாத்திரை செய்யபடுகிறது. இதனை தாய்ப்பாலில் அல்லது வெந்நீரில் உரைத்து குழந்தையின் நாவில் தடவ நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படும்.பாளையங்கோட்டை, சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இம்மருந்து கிடைக்கிறது.

குழந்தைகளின் காப்பு பருவம் என்று சொல்லப் படும், 3 மாதம் முதல் 1 வருடம் வரை இம்மருந்தைக் கொடுக்கலாம். வயிற்று நோய்கள் மற்றும் நுரையூறல் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்க இம்மருந்து பெரிதும் உதவுகிறது. ய்வுகுட்படுத்தப்பட்ட இம்மாத்திரை பேதி, கடுப்புக்கழிச்சல் மற்றும் சிறுநீரக நோய்களை உண்டு பண்ணும் கிருமிகளை அழிப்பதாக (Anti microbial activity) பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் உரைமாத்திரையில் சேரும் தனி மூலிகை சரக்குகளுக்கு நோய்எதிர்பாற்றல் சீராக்கி (Immuno modulatory), வீக்கமகற்றி (Anti inflammatory), ஒவ்வாமை போக்கி (Anti allergic) மற்றும் உணவு செரிமானத்தை உண்டாக்கும் (Digestive) குணங்கள் உள்ளதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

இவ்வாறு சிறப்புடைய உரைமாத்திரையை வாங்கி குழந்தைகளுக்கு சரியாக கொடுத்து குறைவற்ற செல்வமாம் நோயற்ற வாழ்வை நம் வருங்கால இந்திய குடி மக்களாகிய நம் சிறுபிள்ளைகளை வலுவானவர்களாக வளர்ப்போமாக!

 

உரை மாத்திரையை எங்களது இணையதளத்தில் பெறுங்கள்!

Leave a comment