உயரியல் கடிகாரத்தின் படி நம் உடலில் எந்தந்த நேரம் என்னென்ன நிகழ்கிறது என்று தெரிந்து கொள்வோம். இதன் படி இயற்கை விதிகளை மீறாமல் இருந்தால் நோய்கள் அண்டாது! நம் உடல் உறுப்புகள் நெருப்பு, காற்று, நீர், நிலம், மரம் என ஐந்து மூலகங்களாக பிரிந்து செயல்படுகிறது. அவற்றின் பணிகள் இவை தாம்.
அதிகாலை 5-7 மணி
காற்று மூலகமான பெருங்குடல் பணி செய்கிறது. தூங்கி எழுந்து மலம் கழித்தலுக்கான நேரம். இந்த நேரத்தில் தியானம் செய்யலாம்.
காலை 7-9 மணி
நில மூலகமான வயிற்று பகுதிக்கான நேரம். ஆரோக்கியமான உடல் என்றால் இந்த நேரத்தில் பசி எடுக்கும். சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள். நடை பயிற்சி மேற்கொள்ளலாம்.
முற்பகல் 9-11 மணி
நில மூலகமான மண்ணீரல் செரிக்கப்பட்ட உணவை சத்தாக மாற்றி ரத்தத்தில் கலக்கச்செய்கிறது. இந்த நேரத்தில் வேறெந்த உணவும் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. சிந்தனை தெளிவாக இருக்கும்.
மதியம் 11-1 மணி
நெருப்பு மூலகமான இதயத்திற்கான நேரம். ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. உடல் ஆற்றலோடு இயங்கும். மதிய உணவுக்கான நேரம்.
பிற்பகல் 1-3 மணி
நெருப்பு மூலகமான சிறுகுடலுக்கான நேரம். உணவிலிருந்து சத்துக்களை பிரித்து உறிஞ்சிகிறது. உடலின் ஆற்றல் குறைவாக இருக்கும். குட்டி தூக்கம் போடலாம்.
பிற்பகல் 3-5 மணி
நீர் மூலகமான சிறுநீர்ப்பையின் வேலை தொடங்குகிறது. இழந்த ஆற்றல் மீட்கபடுகிறது. திரவ கழிவு வெளியேறுகிறது. வேலை செய்யவும் படிக்கவும் உகந்த நேரம். வொர்க் அவுட் செய்யலாம்.
மாலை 5-7 மணி
நீர் மூலகமான சிறுநீரகத்திற்கான நேரம். சத்துகளை சேமிக்கிறது. எலும்பு மஜ்ஜையை உறுதி செய்கிறது. இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிடவேண்டும்.
மாலை 7-9 மணி
நெருப்பு மூலகமான இதய மேலுறை உடலை பாதுகாக்கிறது. வாசிக்கலாம், ஒய்வு எடுக்கலாம்.
இரவு 9-11 மணி
நெருப்பு மூலகமான மூவெப்ப மண்டலம் பணியைத் தொடங்கும். நாளமில்லா மற்றும் வளர்சிதை மாற்றங்களை பேலன்ஸ் செய்கிறது. தூங்க தயாராகுங்கள்.
இரவு 11-1 மணி
மர மூலகமான கணையத்தின் பணி தொடங்குகிறது. பித்தத்தை வெளியேற்றுகிறது. செல்களை ரிப்பேர் செய்கிறது. ரத்த அணுக்களை உருவாக்குகிறது. நீங்கள் தூங்க வேண்டும்.
இரவு 1-3 மணி
மர மூலகமான கல்லீரலுக்கான நேரம். நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும். உடலின் கழிவுகளை நீக்குகிறது. உடலுக்கு ஒய்வு அளித்து மீட்டெடுக்கிறது.
அதிகாலை 3-5 மணி
காற்று மூலகமான நுரையீரலுக்கான நேரம். ஆழ்ந்த உறக்கம் தேவை. கனவுகளும், நினைவுகளும் வரும். நுரையீரலிலிருந்து கழிவு வெளியேற்றம் நடக்கிறது.
ஆரோக்கியம் என்பது உடலோடு பிறந்து உடலோடு வளர்ந்து உடலோடு அடங்கிப்போவது. இந்த உண்மை புரியாமல் அதை நாம் வெளியில் தேடுகிறோம். சரியான நேரத்தில் சரியான வேலயை உடலுக்குத்தருவது தான் ஆரோக்கியம்.
தகவல் - ஆனந்தவிகடன்